மண்வெட்டி
ஆதித் தமிழர்கள் ஆகிய ஆதி மனிதர்களின் முதல் கருவி
மண்வெட்டி ; எளிமையான பெயர் மண்வெட்டி ; மண்வெட்டி என்ற தமிழ்ப் பெயரிலேயே செயலுக்குரிய விளக்கமும் இருப்பது தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று ; அப்படிப்பட்ட தமிழ் வார்த்தை மணிவெட்டி ; மண்ணை வெட்டப் பயன்படும் வேளாண், தோட்டக் கருவி.
மரக் கைப்பிடியுடன் கூடிய மண்வெட்டியில் செவ்வக வடிவிலான உலோகப் பகுதிதான் மண்ணை வெட்டவும் அள்ளவும் உதவும் ; அந்த உலோகம் இரும்பு ; மரக் கைப்பிடியைப் பொருத்த தகட்டின் மேல்புறத்தில் உருளை வடிவில் தட்டையாகவும்சில வேலைகளுக்கு இலேசாக வளைத்தும் தயாரிக்கப்படுகிறது. கைப்பிடியில் பொருத்தும் இடத்தில், மேல்-கீழ் பூண்கள் அமைக்கப்படுவதும் உண்டு ; மணல், ஜல்லியை அள்ளவும் ; வாய்க்கால், வரப்பு வெட்டவும் ; மடையில் வாயை(வாமடை) அடைக்கவும்; களைகளை நீக்கவும் மண்வெட்டி பயன்படுகிறது .
மண்வெட்டியில்
1) தட்டை மண்வெட்டி,
2) கொழு மண்வெட்டி,
3) மண்கிளறி மண்வெட்டி,
4) சவள் மண்வெட்டி,
5) மண்வாரி மண்வெட்டி
2) கொழு மண்வெட்டி,
3) மண்கிளறி மண்வெட்டி,
4) சவள் மண்வெட்டி,
5) மண்வாரி மண்வெட்டி
என்ற ரகங்கள் உண்டு ; அந்தந்த பயன்பாடுகளுக்கு ஏற்ப அதனதன் வடிவத்தில் சிறிய மாறுதல்கள் இருக்கும்.
விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கட்டிட வேலையின் போது கலவை கலக்க மண்வெட்டி பயன்படுத்தப்படுகிறது ; சவள் என்பது நிலக்கரி போன்ற கனிமங்களை அதிக அளவில் எளிதாக வாரிக்கொட்ட நீண்ட கட்டை பொருத்தப்பட்ட மண்வெட்டி ; ஒரு கையை உள்ளே நுழைக்கும் அளவுக்கு இதன் கைப்பிடி இருக்கும் ; நின்று கொண்டே வயல் வேலைகள் , தோட்ட வேலைகள் செய்ய கைப்பிடியை நீளமாக அமைப்பார்கள்.
குட்டையான கைப்பிடி என்றால் இரு கால்களையும் அகலமாக வைத்துக் கொண்டு கால்களுக்கு இடையில் குனிந்து கொத்திக் கொண்டே போவார்கள் ; மண்வெட்டியால் வேலை செய்பவர்கள் புஜங்கள் வலிமையுடன் இருக்கும் ; சாலை போடுகிறவர்களும் மண்வெட்டியை பயன்படுத்துவார்கள். எனவே
1) தோட்ட மண்வெட்டி,
2) தெரு மண்வெட்டி
2) தெரு மண்வெட்டி
என இரு பிரிவுகள் உண்டு ; தமிழ்நாட்டில் கீரமங்கலம் என்ற ஊர் மண்வெட்டிகள் தயாரிப்புகளில் முதன்மை வாய்ந்த இடம் ஆகும் ; இப்போது வெளிமாநில சவள்களும் மண்வெட்டிகளும் விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கின்றன.
கிராமப்புறங்களில் வீட்டுக் கருவிகளில் மண்வெட்டிக்கு இன்றியமையாத இடம் உண்டு ; இன்றைக்கு விவசாயம் பெருமளவு குறைந்து விட்டாலும், விவசாயத்தில் நவீன ஆதிக்கம் செலுத்தப்படுவதாலும் மண்வெட்டிப் பயன்பாடுகள் குறைந்து விட்டது ; கட்டிட வேலைகளில் மண்வெட்டிப் பயன்பாடுகளை பார்க்க முடிகிறது.
Comments
Post a Comment